ஒரு தொகுதிக்கே 6 மாதங்கள் ஆனது: ராகுல்

2 Min Read

ஒரு தொகுதியில் உள்ள போலி வாக்குகளை கண்டுபிடிக்க தங்களுக்கு 6 மாதங்கள் ஆனதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் பட்டியலை தேர்தல் ஆணையம் தரவில்லை என்றாலும் அனைத்து தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்போம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், முறைகேட்டில் ஈடுப்பட்ட ஒவ்வொரு தேர்தல் அதிகாரிகளும் என்றாவது ஒருநாள் இதனை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

எந்த கல்விமுறையாக இருந்தாலும்
தமிழ் கட்டாயம் : அமைச்சர்

சிபிஎஸ்இ  உள்ளிட்ட எந்த போர்டாக இருந்தாலும் தமிழை இனி கட்டாயமாக படிக்க வேண்டுமென அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் 11-ஆம் வகுப்பை மாணவர்கள் பயன்படுத்த வேண்டுமெனவும் கூறினார். கல்வியாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்டு மாநில கல்வி கொள்கை தயாரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆக.13-இல் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஆக.13-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். காலை 10:30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரூ.50,925 ஊதியம் ஒன்றிய அரசில்
550 காலியிடங்கள்!

ஒன்றிய அரசின் நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 550 நிர்வாக அலுவலர்  (Administrative Officer) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 21-30 வயதுக்குட்பட்ட எந்த டிகிரி முடித்தவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 3 கட்டமாக தேர்வு நடைபெறும். ரூ.50,925-ரூ.90,000 ஊதியம் வழங்கப்படும். வரும் 30-ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மகளிர் உரிமைத் தொகை..
இதனை மறக்க வேண்டாம்!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பத்தில் சில தகவல்களை பூர்த்தி செய்யாமல் சிலர் விட்டுவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டு எண், பேங்க் அக்கவுண்ட் எண், IFSC Code, ஆதார் எண் உள்ளிட்டவற்றை சரியாக பூர்த்தி செய்து, அதற்கான அசல் சான்றிதழ்களை வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தகவல்களை பூர்த்தி செய்வதில் சிலர் தவறு செய்வதாக குறிப்பிட்டுள்ள அரசு, முறையாக பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

வங்கிக் கணக்கு தொடர்பாக
ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு

உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குகளை செட்டில் செய்வது தொடர்பாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த வாடிக்கையாளரின் டிபாசிட், லாக்கரில் உள்ள பொருள்களை கேட்டு குடும்பத்தினர் (அ) நாமினிகள் விண்ணப்பிப்பது வழக்கம். அந்த விண்ணப்பங்களை 15 நாள்களுக் குள் பரிசீலித்து உரியவர்களுக்கு வழங்க வேண் டும். தாமதமாகும் நாள்களுக்கு 4% ஆண்டு வட்டியை கணக்கிட்டு வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *