தமிழ்நாடு குளம் குட்டை இல்லை
செய்தி: பா.ஜ.க. கொக்கு போல் காத்திருந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் – பிஜேபி அண்ணாமலை பேச்சு.
சிந்தனை: ஆக வஞ்சனையாக கொக்கு போல் செயல்படும் என்பதை அவரை அறியாமலே ஒப்புக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு குளம் குட்டை இல்லை – கடல்.
இலவசம்
செய்தி: மகளிருக்கு ஆண்டுக்கு ரூ.12,000.
– சத்தீஸ்கரில் பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி
சிந்தனை: இலவசங்களைக் கேலி செய்த பிரதமர் மோடிக்கு அர்ப்பணம்! ஒரு வகையில் ஜும்லாவாகக் கூட இருக்கலாம்.