திருச்சி, ஜூன் 10 – மேகதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே கருநாடக அரசு அணை கட்டும் திட்டத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9.6.2023) ஆய்வு செய்தார். தஞ்சாவூர் அடுத்த ஆலக் குடியில் முதலைமுத்து வாரி, பூதலூர் அடுத்த விண்ணமங்கலத்தில் முள்ளம் பள்ளம்வாய்க்கால் பகுதிகளில் நடந்து வரும் தூர்வாரும் பணிகளையும், பின்னர், திருச்சி மாவட்டத்தில் திருமங்கலம் கிராமம் கூழையாறு, இருதயபுரம் நந்தியாற்றில் நடைபெற்று வரும் தூர் வாரும் பணிகளையும் முதல மைச்சர் ஆய்வு செய்தார்.
பின்னர், சென்னை திரும்பும் முன்பு, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் ஸ்டா லின் கூறியதாவது:
தமிழ்நாடு அரசு வேளாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிலும், காவிரி டெல்டா பகுதி மீது தனி கவனம் செலுத்தி வருகிறது. காவிரி டெல்டா பகுதிகளில் பல்வேறு சிறப்பு வேளாண் திட்டங் களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் குறுவை, சம்பா சாகுபடி பரப்பு அதிகரித்து, நெல் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. டெல்டா பகுதியில் 2021_-2022ஆம் ஆண்டுகளில் 39.70 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டது. இது, 2022_-2023ஆம் ஆண்டில் 41.45 லட்சம் டன்னாக அதிகரித்து, வேளாண்மையில் புரட்சி செய்யப்பட்டது.
90 சதவீத பணிகள் நிறைவு:
இந்த ஆண்டு பாசன ஆறு, வாய்க் கால்களை தூர்வார ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகள் ஓரிரு நாளில் முடிவ டைந்துவிடும். இந்த ஆண்டு நெல் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன்.
இந்த ஆண்டும் டெல்டா பாசனத் துக்காக, குறிப்பிட்ட நாளான ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப் படுகிறது. இதற்காக, நான் மேட்டூர் சென்று அணையை திறந்து வைக்க உள்ளேன். ‘மேகதாட்டுவில் அணை கட்டுவோம்’ என்று, இப்போது கருநாடகாவில் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் அரசு மட்டுமின்றி, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த பாஜக அரசும் தான் கூறிவந்தது.
அப்போதும் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். அதே நிலையில்தான் இந்த அரசும் இருக்கிறது. மேகதாட்டு அணை கட்டும் திட்டத்தை எதிர்ப் பதில், மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞர் போல நானும் உறுதியாக இருக்கிறேன். அதில் எந்தவித சந் தேகமும் வேண்டாம்.
தமிழ்நாடு ஆளுநர் பல மசோதாக் களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்துள்ளார். இதை எதிர்த்து நீதிமன் றத்தை அணுகி தீர்வு காணலாமா என சட்ட நிபுணர் களிடம் ஆலோசித்து வருகிறோம்.
ஆளுநரை மாற்ற கோரிக்கை வைப் பீர்களா என்ற கேள்வி எழுகிறது. நாங்கள் நினைப்பது எல்லாம் நடந் தால், இந்த பிரச்சினையே இல்லை. தமிழ்நாட்டில் உள்ள பல பல்கலைக் கழகங்களில் படித்து முடித்த மாணவர் கள் கடந்த 2 ஆண்டுகளாக பட் டம் பெறமுடியாத நிலை உள்ளது.
பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர்தான் இதற்கு காரணம். எனவே தான், பல்கலைக்கழக வேந்தராக, ஆளு நருக்கு பதிலாக முதலமைச்சரை நியமிக் கும் தீர்மானத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றியுள்ளோம்.
பல்கலைக்கு கலைஞர் பெயர்:
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை பல்கலைக்கழகத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நிச்சயம் அதுபற்றி பரிசீலிக்கப்படும். தற்போது இருக்கும் பல்கலைக்கழ கத்துக்கு அவரது பெயரை வைப்பதா, புதிதாக தொடங்குகிற பல்கலைக்கழ கத்துக்கு வைப்பதா என்று, பரிசீலித்து முடிவு செய்யப்படும்.
வீடுகளுக்கான மின் கட்டணம் எக் காரணம் கொண்டும் உயர்த்தப் படாது. விவசாயம், குடிசைகள், கைத் தறி, விசைத்தறி ஆகியவற்றுக்கான இலவச மின்சார திட் டம் தொடரும். வணிகப் பயன்பாடு, தொழில் நிறுவனங்களுக்கான கட்டணம் மட்டும் சிறிது உயரும். இது சாமானிய மக்களை பாதிக்காது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.