சென்னை,ஆக.8 கூட்டுறவுச் சங்கங்கள், வங்கிகளில் உதவியாளா், இளநிலை உதவியாளா் என மொத்தம் 377 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு அக்டோபா் 5-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.
இந்தத் தோ்வுக்குத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டம் மற்றும் விண்ணப்பிப்பது தொடா்பான அனைத்து விவரங்களும் [https://www.tncoopsrb.in/](https://www.tncoopsrb.in/) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தலைமைக் கூட்டுறவு சங்கங்கள் மட்டுமின்றி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களிலும் உதவியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப, மாவட்ட வாரியாக தனித்தனியாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மாவட்டங்களின் தேவைகளுக்கு ஏற்ப தோ்வு தேதிகள் அறிவிக்கப்படும் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.