அறிவாராய்ச்சி மனிதனை உயர்விக்கும்

1 Min Read

அறிவாராய்ச்சி மனிதனை உயர்விக்கும்

மணமக்களுக்கு வாழ்த்தும், அறிவுரையும் கூறு முறையில் தந்தை பெரியார் அவர்கள் கூறியதாவது:-

நம்மிடையே நடைபெற்று வரும் கல்யாணங்கள் மூலம் பெண் அடிமையை நிலைத்திருக்கும்படி செய்வது, ஜாதியை நிலைக்கச் செய்வது, மூட நம்பிக்கையை நிலைக்கச் செய்வது ஆகிய மூன்றுதான் ஆகும்.

இந்த மூன்றையும் ஒழிக்கின்றது தான் எங்கள் கொள்கை யாகும். கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவற்றில் மக்கள் தங்கள் சொந்தப் புத்தியைப் பயன்படுத்தப்படுவது தடைப்பட்டு விட் டது. அதனால் தான் மனிதன் இந்த அவல நிலையில் இருக் கின்றான். இதனை மாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் வேலை.

மனிதன் அறிவை எவ்வளவுக்குப் பயன்படுத்தி ஆராய்கின் றானோ, அவ்வளவுக்கு அவ்வளவு உன்னத நிலையை அடை கின்றான்.

மனிதன் ஆகாய விமானத்தில் சுமார் 150 மைல்கள் உயரத் துக்கு மேல் பறந்து விமானத்தை விட்டு வெளியே வந்து காற்றில் லாத விண்வெளியில் நீச்சல் அடிக்கக்கூடிய நிலைமையினை நாம்  பத்திரிகையின் வாயிலாகக் காண்கின்றோம்.

மனிதன் பிறந்த நாள் முதல் கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணாக்கனாகவே இருக்கின் றான். அவன் கற்றுக் கொள்ள வேண்டியது அவ் வளவு இருக்கின்றது.

மனிதன் பற்றற்ற நிலையிலிருந்து எதையும் சிந்திக்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். மேலும் பேசுகையில், சீர்திருத்தத் திருமணம் மூலம்  பெண்ணுரிமை நிலை நாட்டப்படுவது பற்றியும் நமது இன இழிவு மூட நம்பிக்கையும் ஒழிக்கப்படுவது பற்றியும், மணமக்கள் வாழ்க்கையில் பகுத்தறிவுடனும், சிக்கனத்தைக் கடைப்பிடிக்கக் கூடியவராகவும் வாழ வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுப் படுத்திப் பேசினார்.

13.06.1965 அன்று சிதம்பரம் வட்டம் அகரநல்லூரில் நடைபெற்ற வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (‘விடுதலை’ 22.06.1965).

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *