மேட்டூர் மாவட்ட கழக சார்பில் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை பட்டித்தொட்டி எங்கும் கோலாகலமாக கொண்டாடுவோம் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

2 Min Read

மேட்டூர், ஆக. 8- மேட்டூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 03-08-2025  ஞாயிறு காலை 10.00 மணியளவில் பெரியார் படிப்பகம் எடப்பாடியில் எழுச்சியுடன் நடைபெற்றது.

மாவட்ட இளைஞரணி தலைவர் சு.கபிலன், நிகழ்விற்கு தலைமை வகித்தார் மாவட்ட இளைஞரணி செயலாளர் க.சிறீதர், அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் கா.நா.பாலு, நோக்க உரையாற்றினார்.

மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, கருத்துரையாற்றினார்.

நகர தலைவர் இரா.கலையரசன், மாவட்ட துணைச் செயலாளர் அ.ப.ராசேந்திரன், ப.க. மாவட்ட தலைவர் கோவி.அன்புமதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் பெரியார் பெருந் தொண்டார் அ.சத்தியநாதன், மேட்டூர் ஒன்றிய தலைவர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், இளைஞரணி க.கமலேஸ்வரன், அ.மணிகண்டன், மோ.இமயா வரம்பன். க.மோகன்ராஜ், ஆகியோர் பங்குபெற்று சிறப்பித்தனர்.

பாப்பம்பாடி கிளைத் தலைவர் உல.கென்னடி, நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் சென்னையில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

மேட்டூர் மாவட்டத்தில் உள்ள பழைய விடுதலை சந்தாக் களை புதுப்பித்தும். புதிய சந்தாக் களை சேர்ப்பது என முடிவு செய்யப்படுகிறது.

மேட்டூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் இளைஞரணி சார்பில் கலந்துரை யாடல் கூட்டங்களை நடத்தி கழக அமைப்புகளை புதுப்பிப்பது எனவும் கிளைக் கழகங்கள் வாரியாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கூட்டங்களை நடத்துவது. கழகத் தோழர்கள் இல்லங்கள் தோறும் கழக கொடி ஏற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.

தலைமைக் கழக சார்பில் வெளியான துண்டறிக்கையை  உடனடியாக அனைத்து இடங் களிலும் ஆசிரியர் அவர்கள் அறிவிப்பிற்கிணங்க வீடு வீடாகக் கடை கடையாக கழக இளைஞரணி சார்பில்  துண்டறிக்கையை பரப்பு வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதி காத்த சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின், அவர்கள் சிறப்பு ரையுடன் சென்னை மறைமலை நகரில் 2025 அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டிற்கு மேட்டூர் மாவட்டத்திலிருந்து தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது என தீர்மானிக்கப்படுகிறது. மாநாட்டை விளக்கி சுவரெழுத்து விளம்பரங்களை செய்வது என முடிவு செய்யப்படுகிறது.

திருச்சி சிறுகனூரில் அமைய வுள்ள பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நன்கொடை திரட்டி தருவது என தீர்மானிக்கப்படுகிறது.

உலகத் தலைவர், தத்துவத் தலைவர் தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை மேட்டூர் மாவட்டம் முழுவதும் இளைஞரணி சார்பில் பட்டித்தொட்டி எங்கும் கோலாகலமாக பிறந்த நாள் விழாவை கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது.

இளைஞரணி பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மாவட்ட இளைஞரணி தலைவர் சு.கபிலன, மாவட்ட இளைஞரணி செயலாளர் க.சிறீதர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *