சென்னை. ஜூன் 10 – கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு வரும் 12ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது. இதில் அரசுப் பள்ளி மாண வர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் 53 இடங்கள் ஒதுக்கப்படு கின்றன.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல் கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திரு நெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடு மலைப்பேட்டை, தேனி, வீர பாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
இக்கல்லூரிகளில் அய்ந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பிவிஎஸ்சி – ஏஎச்) 660 இடங்கள் இருக்கின்றன.
சென்னை, நாமக்கல், திருநெல் வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூ ரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 63 இடங்கள் (15 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன.
இதுபோக, தமிழ்நாட்டுக்கு 597 இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு:
திருவள்ளூர் மாவட்டம் கோடு வெளியில் உள்ள உணவு, பால்வள தொழில்நுட்ப கல்லூரியில் பி.டெக். படிப்புகளில் உணவு தொழில்நுட்ப பிரிவில் 40 இடங்கள், பால்வள தொழில்நுட்ப பிரிவில் 20 இடங்கள் உள்ளன. இதில், உணவு தொழில்நுட்பப் படிப்புக்கான 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, எஞ்சியுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.
இதேபோல, ஓசூர் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி, மேலாண்மைக் கல்லூரியில் கோழி யின தொழில்நுட்பப் படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது.
இந்நிலையில், பிவிஎஸ்சி – ஏஎச், பி.டெக். படிப்புகளுக்கு 2023_ 2024ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் வரும் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் 30ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
வெளிநாடு வாழ் இந்தியர், அவர்களது வாரிசுகள் மற்றும் நிதிஆதரவு பெற்றோர், வெளி நாட்டினருக்கான இடஒதுக்கீடு, விண்ணப்ப வழிமுறைகள், மற்றும் இதர விவரங்களை இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இந்த படிப்புகளுக்கு பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
7.5% உள் இட ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் கால் நடை மருத்துவம் மற்றும் பரா மரிப்புப் படிப்பில் 45 இடங் கள், உணவு தொழில்நுட்பப் படிப்பில் 3 இடங்கள், பால்வள தொழில் நுட்ப படிப்பில் 2 இடங்கள், கோழியின தொழில்நுட்ப படிப் பில் 3 இடங்கள் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.