கள்ளக்குறிச்சி, ஆக.7- கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்புத்தமங்கலம் கிராமத்தில் உள் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா நடைபெற்று வருகிறது.
கடந்த 5.8.2025 அன்று இரவு அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் ‘அம்மன் வீதி உலா’ நடைபெற்றது. மேள தாளத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, கிரா மத்தின் முக்கிய தெருக்கள் வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு தெருவில் சென்றபோது, அம்மனின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த குடை அங்கு தாழ்வாக சென்ற மின் கம்பியில் எதிர்பாராமல் உரசியது.
இதில் மின் கம்பி அறுந்து அம்மன் முன்னால் கரகம் சுமந்து சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பவர் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து கோவில் திருவிழாவும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.