* 14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கை அடைந்தது தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அபாரம்: கடந்த நிதியாண்டில் 11.19 சதவீதமாக அதிகரிப்பு, கலைஞர் ஆட்சியின் சாதனையை எட்டினார் மு.க.ஸ்டாலின்.
* அரசு திட்டங்களில் முதலமைச்சர் பெயரை பயன்படுத்த தடையில்லை: வழக்குத் தொடர்ந்த அதிமுக மேனாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம், உச்ச நீதிமன்றம் அதிரடி
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* டில்லியில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் தலைமையில் நடைபெற்ற ஓபிசி 42 சதவீத இட ஒதுக்கீடு போராட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வாழ்த்து.
* ஓபிசி மசோதாவை பிரதமர் மோடியும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதாக ரேவந்த் குற்றச்சாட்டு.
* பீகார் ‘சர்’ வாக்காளர் திருத்தம் காரணமாக நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ‘முதலில் உங்கள் பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்களை காட்டுங்கள்’, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மம்தா சவால்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு வருகை தந்த உத்தரப்பிரதேச அமைச்சர், கங்கை நீர் ‘கங்கா மையா’ வீட்டு வாசலுக்கு வருவது ஆசீர்வாதம் என்ற பேச்சால் சர்ச்சை.
தி டெலிகிராப்
* ஆசிரியர் பற்றாக்குறை எய்ம்ஸ் மருத்துவ மனையை கடுமையாக பாதிக்கிறது: 2,500 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன, இது 4 ஆண்டுகளில் மிக அதிகம்
– குடந்தை கருணா