ஏசு நாதர், ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்றார்; ‘மேல் வேட்டியைக் கேட்டால் இடுப்பு வேட்டியையும் அவிழ்த்துக் கொடு’ என்றார் என்பார்கள். இது நடப்புக்குப் பொருந்துமா? எந்தக் கிறித்தவனாவது இப்படி நடக்கிறானா? இப்படி நடக்கத்தான் முடியுமா? இப்படி மேல் வேட்டியைக் கேட்டவர்களுக்கு இடுப்பு வேட்டியைக் கிறித்தவர்கள் அவிழ்த்துக் கொடுப்பதாக இருந்தால் அவர்கள் எல்லாம் அம்மணமாக அல்லவா இருக்க வேண்டும்? ஒரு கன்னத்தில் அறைந்தவர்களுக்கு மறு கன்னத்தைக் காட்டுவதாக இருந்தால் அவர்களுக்கு எல்லாம் பல் இருக்க முடியுமா? இம் மாதிரியான வறட்டுத் தத்துவம் எல்லாம் எந்தக் காரியத்துக்காவது உதவுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’