நியூயார்க், ஆக. 7- ஆகஸ்ட் 6-ஆம் தேதி, அமெரிக்காவில் உள்ள யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான சேவைகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில விமானங்கள் தாமத மாகப் புறப்பட்டன.
நியூவார்க், டென்வர், ஹியூஸ்டன் மற்றும் சிகாகோ போன்ற முக்கிய விமான நிலையங்களில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்கள் நிறுத்தப் பட்டன.
5.8.2025 அன்று மட்டும் சுமார் 28 விழுக்காடு விமானங்கள் புறப்படு வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு இந்திய நேரப்படி ஆகஸ்ட் 7 காலை 3.00 மணியளவில் சரி செய்யப்பட்டதாகவும், விமானங்கள் மீண்டும் புறப்படத் தொடங்கிய தாகவும் FlightRadar24 அதன் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித் துள்ளது.