பீஜிங், ஆக. 7- எண்ணெய் இல்லாமல் உணவு சமைக்கும் (பார்பிக்யூ சமையல் முறைக்கு)அறிவியல் பூர்வமான முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சீனாவில் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது. இது சீன உணவு கலாச்சாரத்தில் புதிய வளர்ச்சியாகும்.
ஆய்வு நிலையம்
இந்த ஆய்வு நிலையம், எண்ணெய் இல்லாமல் உணவுப் பொருட்களைச் சுட்டுச் சமைக்கும் முறைகளில் நிபுணத்துவம் பெற மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1,000 கலைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கவும், மாணவர் சேர்க்கை அடுத்த ஆண்டு தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 50 முதல் 100 மாணவர்கள் வரை இந்தப் படிப்பில் சேரலாம்.
பல மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டித்தரும் பார்பிக்யூ துறையில், திறமையான நிபுணர்களை உருவாக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தின் முயற்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் சிலர் இந்தத் திட்டத்தைப் பாராட்டியும், சிலர் கேலி செய்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது பார்பிக்யூ துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் என நம்பப்படுகிறது.