சேரன்மாதேவி, ஜூன் 10– திருநெல் வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா, சேரன்மா தேவி குருகுலப் போராட்டம் நூற்றாண்டு விழா, முத்தமிழறி ஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? ஆசிரியர் கி.வீரமணி 90 இரு நூல்கள் வெளியிட்டு விழா 4..6. 2023 அன்று ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் எழுச்சியோடு நடைபெற்றது
மாவட்ட கழக தலைவர் ச.ராஜேந்திரன் தலைமை வகித்தார் சேரன்மாதேவி ஒன் றிய கழக தலைவர் செல்வ சந் தரசேகர் வரவேற்புரை ஆற்றி னார்.
நெல்லை மாவட்ட கழகச் செயலாளர் இரா.வேல்முருகன் நூல்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்
தந்தை பெரியார் விருது பெற்ற திமுகவின்மூத்த முன் னோடி 97 அகவை நிரம்பிய பத்தமடை ந.பரமசிவம் நூல் களை வெளியிட சேரன்மகா தேவி மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட் நூல்களை பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து காங்கிரஸ், திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பகுஜன் ஜமாத் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, புரட்சிகர இளைஞரணி சார்ந்த தோழர்கள் நூல்களை பெற்றுக் கொண்டனர். காப் பாளர் இரா.காசி வாழ்த்துரை வழங்கினார் .
கழக சொற்பொழிவாளர் இரா. பெரியார் செல்வன் ஒன் றரை மணி நேரம் சிறப்புரை யாற்றினார்.
நிகழ்ச்சியில் வள்ளியூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ந.குணசீலன், வள்ளியூர் கழக தலைவர் செ. ரமேசு, வீரவ நல்லூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், பெரியார் பெருந்தொண்டர் பெரியார் பித்தன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக வீரவநல்லூர் நகரத் தலைவர் மா.கருணாநிதி நன்றி கூறினார்.