நாள் : 2025 ஆகஸ்ட் 15, 16, 17
வெள்ளி, சனி, ஞாயிறு – மூன்று நாட்கள்
நேரம் : காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை
இடம் : அறிவுச்சுடர் வலைக்காட்சியகம், ஞானம் நகர்,
மாரியம்மன் கோவில் சாலை, தஞ்சாவூர்.
பேரன்புடையீர் வணக்கம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலோடு திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள் உள்பட ஊடகத்துறையில் ஆர்வம் உள்ள கழகத் தோழர்களுக்கு பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு சார்பில் மூன்று நாட்கள் பயிற்சிப் பட்டறை தஞ்சையில் நடைபெறவுள்ளது.
திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி, மாநில ஊடகப்பிரிவு செயலாளர் முருகேசன், தகவல் தொழில் நுட்பக்குழு அமைப்பாளர் வி.சி.வில்வம் ஆகியோர் ஊடகப் பயிற்சி அளிக்க உள்ளார்கள்.
- யூடிப் வலைக்காட்சி சேனல் தொடங்குவது உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்படும்.
- மூன்று நாள்களுக்கு உணவு, தங்குமிடம் வசதி செய்து தரப்படும்.
- மூன்று நாள்களுக்குக் கட்டணம் : ரூ.1000
- முன்பதிவு செய்து கட்டாயம்
- முதலில் பதிவு செய்யும் 10 நபர்களுக்கு மட்டும் அனுமதி
- தொடர்புக்கு : 63805 29454
– இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், பயிற்சி பட்டறை பொறுப்பாளர், திராவிடர் கழகம்
மா.அழகிரிசாமி, மாநிலத் தலைவர்,
பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு,
1825/4 ஞானம் நகர், மாரியம்மன் கோவில், தஞ்சாவூர்