கீழப்பாவூர், ஜூன் 10– தென்காசி மாவட் டம் கீழப்பாவூரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா நூல்கள் அறிமுக விழா எழுச்சியோடு நடைபெற்றது.
3.6.2023 அன்று மாலை ஆறு மணிக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.சவுந்தர பாண்டியன் வரவேற்புரையாற்ற வும், நகரத்தலைவர் மு.இராமசாமி தலைமையேற்கவும், பொதுக்குழு உறுப்பினர்கள் பி.பொன்ராசு, அய்.இராமச்சந்திரன் முன்னிலை வகித்திடவும், காப்பாளர் டேவிட் செல்லத்துரை நூல் அறிமுகவுரை யாற்றினார்.
மாநில கழக ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு இரா. குணசேகரன் தொடக்க உரையாற்றினார்.
பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ்.இராசன் நூல்களை வெளி யிட்டார். திமுக பொறுப்பாளர் களும், தோழர்களும் நூல்களை பெற்றுக்கொண்டார்கள். கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல் வன் சிறப்புரையாற்றினார்.
திராவிடமாணவர்கழக மாநில துணைச் செயலாளர் சு.இனியன் நன்றி கூறினார். தொடக்கத்தில் தந்தைபெரியார் சிலையருகில் முத் தமிழறிஞர் கலைஞர் படத்திற்கு காப்பாளர் டேவிட்செல்லத்துரை மாலையணிவித்தார்.