டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* குடந்தையில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உச்ச நீதிமன்றத்தில் மரியாதைக்குரிய நீதிபதிகளுக்கு உரிய மரியாதையுடன் கூறிக் கொள்கிறேன். உண்மையான இந்தியர் யார் என்பதை நீதிபதிகள் தீர்மானிக்க முடியாது. இது நீதிபதிகளின் எல்லைக்கு அப்பாற்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
* தெலங்கானா அரசின் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் கோரி, டில்லி ஜந்தர் மந்தரில் இன்று ஆர்ப்பாட்டம். முதலமைச்சர் ரேவந்த் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்பு. கார்கே தொடக்க உரை; ராகுல் மாலையில் நிறைவுரை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மாநிலங்களவையில் சி.அய்.எஸ்.எப். காவலர்களை பயன்படுத்திட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்.
* மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நாடாளுமன்றம் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சலுக்கு மத்தியில், ஒன்றிய அரசு நிறைவேற்றம்.
* பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள், விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்தைக் கேளுங்கள்: உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மனு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகாராட்டிரா பாஜக செய்தித் தொடர்பாளர் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம். எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு. “ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அடி” என்று சாடிய NCP (SP) தலைவர் ரோகித் பவார், இது இந்திய நீதித்துறை அமைப்பின் பாரபட்சமற்ற தன்மையில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருத்து.
தி இந்து:
* அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக் கான வரி கணிசமாக உயர்த்தப்படும் என டிரம்ப் அறிவிப்பு
தி டெலிகிராப்:
* பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் கங்கை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது: வெள்ளத்தில் மூழ்கிய தெருக்களில் வாகனங்களை படகுகள் மாற்றின. பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியில் உள்ள 84 மலைத்தொடர்களிலும் வெள்ளம் புகுந்த தால், எரியூட்டல் மற்றும் பிற மத சடங்குகளை அருகே உள்ள கூரைகள் மற்றும் உயரமான தளங் களுக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
– குடந்தை கருணா