கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற தேர்தல் சிறப்பு மாநாட்டில் 7 அம்ச உறுதிமொழிகளை வெளியிட்டு மக்களிடம் வாக்கு கேட்டார் திராவிட நாயகன் நம் தி.மு.கழகத் தலைவர்.
அதில் முதல் அம்சம், பொருளாதாரம். “வளரும் வாய்ப்புகள்-வளமான தமிழ்நாடு அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்க பொருளாதாரத்தை எட்டுவது முதல் இலக்கு” என்று உறுதியளித்தார்.
அவரது வாக்குறுதியை நம்பி வாக்களித்து தன்னை முதலமைச்சராக்கிய மக்களுக்காக ஓயாது உழைத்து, தமிழ்நாட்டு பொருளாதாரத்தை இரட்டை இலக்கத்தில் வளர்ச்சியடைய வைத்து, தான் அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றியுள்ளார்.
திருச்சி சிறுகனூரில் முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்த நாள் 2021 மார்ச் 7.
தமிழ்நாடு 11.29% என்ற இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை எட்டியிருப்பதை ஒன்றிய அரசின் புள்ளிவிவரத்துறை அறிவித்துள்ள நாள் 2025 ஆகஸ்ட் 5.
பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதாரத்தை அடைவோம் என்ற நம் தலைவர் அதனை நான்கே ஆண்டுகளில் சாதித்துக் காட்டியிருக்கிறார்.
ஆகையால்தான் இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சராகத் திகழ்கிறார் நம் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
குலதெய்வத்தின் சக்தியோ சக்தி (!)
குலதெய்வக் கோயிலுக்கு சென்ற போது வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்
மேல்மலையனூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு செல்வதற்காக வேனில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த போது பாவந்தூா் அய்யனாா் கோயில் அருகே வேன் கவிழ்ந்ததில் அதில் பயணித்த வேன் ஓட்டுநா் உள்பட 18 போ்கள் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூா் வட்டத்துக்குள்பட்ட குப்புச்சிபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் செந்தில்குமாா் (49).
இவா் குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் மேல்மலையனூா் கோயிலுக்கு செல்வதற்காக 18 போ்களுடன் பயணித்தனராம். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே தியாகதுருகம்- திருவண்ணாமலை சாலையில் வேனில் ஞாயிற்றுக்கிழமை காலை சுமாா் 3 மணி அளவில் சென்று கொண்டிருந்தராம்.
ரிஷிவந்தியம் அருகே உள்ள பாவந்தூா் கிராம சாலையில் அய்யான் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது வளைவில் திரும்பியபோது வேன் நிலைத்தடுமாறி தலைகிழே கவிழந்து விட்டதாம்.
வேனில் இருந்த அனைவரும் காயமடைந்து விட்டனராம். உடனே அருகிலிருந்த கிராம மக்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம்.
அதில் செந்தில்குமாா் (49), பாண்டமங்கலத்தைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் ராம்குமாா் (34), குச்சிபாளையத்தைச் சோ்ந்த சின்னுசாமி மகன் லோகநாதன் (63), வேன் ஓட்டுநா் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சோ்ந்த முருகேசன் மகன் விமல்ராஜ் (35) உள்ளிட்ட 4 பேருக்கு மட்டும் கை எலும்பு முறிந்து விட்டதாம் மற்றவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாம். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.