செய்திச் சுருக்கம்

வெள்ளத்தில் சிக்கிய
11 வீரர்களைக் காணவில்லை

உத்தரகாண்ட் மேக வெடிப்பால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில், அங்கிருந்த ராணுவ முகாமும் அடித்து செல்லப்பட்டது. இதில் மீட்புபணிகளுக்குச் சென்ற 11 ராணுவ வீரர்கள் காணவில்லை என்று அஞ்சப்படுகிறது. அம்மாநிலத்தில் நேற்று மதியம் 1:45 மணிக்கு மேகவெடிப்பு பெருவெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை 130 பேரை மீட்டுள்ளதாக அம் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

ரூ.17,000 கோடி கடன் மோசடி: அமலாக்கத் துறை வலையில் அனில் அம்பானி

கடன் மோசடி வழக்கில், அனில் அம்பானி நேற்று அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார். ரூ.17,000 கோடி மோசடி தொடர்பாக அவருக்கு  அழைப் பாணை அனுப்பப்பட்டி ருந்தது. யெஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவ னங்களிடம் சுமார் ரூ.78,000 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டு, அந்தப் பணம் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது.

 

l கடும் எதிர்ப்புக்கு இடையே மணிப்பூரில் குடியர சுத் தலைவர்  ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானம் நிறை வேற்றம்.

l ரூ.17 கோடியில் கொளத் தூரில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

l மும்பையில் ஏ.டி.எம். எந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்த கும்பல் கொள்ளை முயற்சித் தோல்வியால் தப்பி ஓட்டம்.

l அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூ.மதிப்பு நேற்று முன்தினம் 52 காசுகள் சரிந்து ரூ.87.7 சைபர் ஆக இருந்தது நேற்று வர்த்தகம் தொடங்கி ஏற்ற இறக்கங்கள்  நீடித்தது. பின்னர் ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து ஒரு டாலருக்கு நிகரான மதிப்பு ரூ.87.88 ஆக இருந்தது.

l வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாட்டுப் பணிகள் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை.

l அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே தூய்மைப் பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. மேயர் பிரியா குற்றச்சாட்டு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *