கடவுள் சின்னம் என்பது ஒழுக்கத்தையும், எல்லா மக்களுடைய உள்ளத் திருப்தியையும் பொறுத்தது; ஆட்சிச் சின்னம் என்பது நீதியையும், எல்லா மக்களுடைய திருப்தியையும் பொறுத்தது. அது மத சாத்திரத்தைப் பொறுத்தது; இது அரசியல் சட்டத் தைப் பொறுத்தது. இவற்றில் ஒழுக்கம், நேர்மை இல்லாமல், சாத்திரத்தையும், சட்டத்தையும் கருதிக் கொண்டு இந்த இரண்டையும் காப்பாற்றப் புறப் படுவது கைபலமே அல்லாமல் நியாய பலத்தைப் பொறுத்ததாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’