பி.எட். மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை இணைய வழியில் தேர்வு செய்யலாம் அமைச்சர் கோவி.செழியன் தகவல்

சென்னை, ஆக.5  பி.எட். மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியை ஆன்லைனில் தேர்வு செய்யலாம் என்று அமைச்சர் கோவி.செழியன் தகவல் தெரிவித்துள்ளார். 2025-2026 பி.எட். மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 3,454 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் ஆக.9 மாலை 5 மணி வரை தாங்கள் விரும்பும் கல்லூரியை தேர்வு செய்யலாம். தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரி, 14 உதவி பெறும் கல்லூரிகளில் 2,040 இடங்கள் உள்ளன.

இந்த சிரமங்களைப் போக்க முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு பி.எட். மாணாக்கர் சேர்க்கை இணைய வழியில் நடத்திட முடிவெடுக்கப் பட்டது. அதன்படி, விண்ணப்பங்கள் 20.06.2025 முதல் 21.07.2025 வரை இணைய வழியில் பெறப்பட்டன. 557 ஆண்கள் 2983 பெண்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3545 நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பின்னர் 31.07.2025 அன்று தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1140 இடங்கள் என 21 கல்வியியல் கல்லூரிகளில் 2040 இடங்கள் உள்ளன.

இணைய வழியில் 04.08.2025 பிற்பகல் 1.00 மணி முதல் 09.08.2025 மாலை 5.00 வரை மாணாக்கர்கள் தங்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தங்கள் உள்நுழைவு ID மூலம் www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம்.

 

 

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *