‘அகரம்’ அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா, இதுவரை 51 முதல் தலைமுறை மருத்துவர்களை உருவாக்கியுள்ளார். ‘அகரம்’ அறக்கட்டளையின் 15 ஆண்டு விழா நேற்றுமுன்தினம் (3.8.2025) சென்னையில் பெரிய அளவில் நடந்தது. இதில், அவரால் பயனடைந்தவர்கள் மேடைக்கு வந்தனர். அப்போதுதான் 51 பேரை அவர் மருத்துவராக்கியுள்ளது தெரியவந்தது. அவரது இந்தச் செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.