‘‘தி.மு.க.வில் உறுப்பினராக என்ன மனப்பாடம் செய்ய வேண்டும்?’’

1 Min Read

வணக்கம் தோழர்களே, ‘‘தி.மு.க.வில் உறுப்பினராக என்ன மனப்பாடம் செய்ய வேண்டும்?’’ என்று திராவிடம் 2.0 கருத்தரங்கில் எழுத்தாளர் மானமிகு வே. மதிமாறன் அவர்கள் சிறப்பாகப் பேசிய உரையை Periyar Vision OTT இல் பார்த்தேன். தி.மு.க.வைச் சுழல வைப்பது அங்கே குறையாமல் இருக்கிற பெரியாரியக் கண்ணோட்டம்தான் என்றும், அதன் சமூக நீதி, சிறுபான்மை, மதச்சார்பின்மை அரசியலே உயிர்ப்புடன் என்றும் அதனை வழிநடத்தி வருகிறது எனவும் தெளிவாகத் தெரிவித்தார். நடிகராக சினிமாவில் வாய்ப்புத் தேடி வந்தவர்கள் பெரும்பாலும் கலைஞரின் ‘பராசக்தி’ படத்தின் கனல் தெறிக்கும் வசனத்தை மனனம் செய்து நடித்தவர்களே அதனால் தி.மு.க.வில் உறுப்பினராக குறைந்தபட்சம் கலைஞர் கருணாநிதி அவர்கள எழுதிய புத்தகங்கள், அவரின் போர்க்குணம், சமூக நீதி அரசியல் ஏனைய அடிப்படை சிந்தனைகள் அவசியம் என பாராட்டி பேசியது மணிமகுடம். வாழ்த்துகள்.

– மு.சாரங்கபாணி
கூடலூர்

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளைத் தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *