இந்திய ரயில் விபத்துகள் : மனித தவறுகளும், பதற வைத்த பின்னணியும்!
இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் மிக வேகமாக வளர்ந்து வரும் சூழலில் ரயில் விபத்துகளை ஏன் தடுக்க முடியவில்லை என்ற கேள்வி எழுகிறது. தற்போது எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங்(Electronic Interlocking) சிஸ்டம் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அய்ரோப்பிய தொழில்நுட்ப அம்சம் கொண்ட எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் மூலம் சிக்னல்கள் கட்டுப்படுத்தப் பட்டு, ரயில் வழித்தட மாற்றங்கள் சரியான முறையில் மேற் கொள் ளப்பட்டு விபத்துகள் ஏற்படாமல் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பான தொழில்நுட்ப வசதிகள்
இதுதவிர பயணிகள் தரப்பிலும் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக லிங்கி ஹோஃப்மன் புஸ்ச் (LHB) வகையிலான பெட்டி களை சொல்லலாம். இவை எடை குறைவாக, மேம் பட்ட டிஸ்க் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக, அதி வேக பயணத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை. இத்தகைய பெட்டிகளால் தான் ஒடிசா பாலசோர் ரயில் விபத்தில் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த விபத்திற்கான பின்னணி குறித்து தற்போது சிபிஅய் விசாரித்து வருகிறது. எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் சிஸ்டத்தில் தான் தவறு நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் தொடர்பாக கடந்த 2022ஆம் ஆண்டு சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில் சில விஷயங்களை கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது, ரயில் ஓட்டு நர்கள் தங்களின் பயணத்தின் போது ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு சிக்னலை பார்க்க வேண்டி யுள்ளது. அந்த சிக்னலுக்கு ஏற்ப ரயிலின் இயக்கத்தில் மாற்றங் களை செய்ய வேண்டும்.
ரயில்வே ஊழியர்களின் தவறு
இதில் தொழில்நுட்ப வசதிகளின் உதவி எதுவும் கிடையாது. ஓட்டுநர்கள் நேரடியாகவே கவனத்துடன் செயல்பட வேண்டும். இது பெரும் சிக்கலான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுதவிர 1995 முதல் 2019 வரை கணக்கில் எடுத்துக் கொண்டால் பாதிக்கும் மேற்பட்ட ரயில் விபத்துகள் ரயில்வே ஊழியர்களின் தவறால் நடந்திருப்பது தெரிய வருகிறது.
விபத்திற்கான காரணங்கள்
இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் அல்லாத நபர்கள், உபகரணங்கள், நாச வேலை காரணமாக ஏற்பட்ட விபத் துகள், மற்றவை எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. மேலும் சில புள்ளிவிவரங்களும் இருக்கின்றன. குறிப்பாக 1960 முதல் 2018 வரை எடுத்து கொண்டால் ரயில் மோதலை காட்டிலும், தடம் புரண்டு விபத்தில் சிக்கியவை தான் அதிகம்.
ஆண்டுரயில்கள் மோதல்தடம் புரண்டவை
1960 – 61130 1415
1980 – 8187 936
2000 – 0120 350
2018 – 193 24
ஆண்டுபலியானவர்கள்காயமடைந்தவர்கள்
1965 – 6641 458
2000 – 01341 733
2018 – 1986 16