அரசியல் கட்சிகள் மாநாடுகள், கூட்டங்கள் நடத்துறப்போ மழை வந்து கூட்டத்துக்குப் பிரச்சினை வர்றதெல்லாம் ரொம்ப சாதாரணம் தான்! ஒன்னு, அதுக்கேற்ப கூரை போட்ருக்கணும்… இல்லன்னா, கூட்டத்தைத் தள்ளிப் போடணும். மழையில் நனைஞ்சுக்கிட்டே கூட்டம் கேக்குறதும் கூட உண்டு. ஆனா, கூட்டத்தப்போ மழை பெய்யாம இருக்க பூஜை பண்றதெல்லாம் உச்சபட்ச கோமாளித்தனம் இல்லையா?
நடிகர் கட்சிக் கொள்கை விளக்கக் கூட்டம் ரெண்டு வாரத்துக்கு முன்னே நடந்தப்போ, மழை பெய்யுற மாதிரி இருந்துருக்கு. சரி, நாற்காலியைத் தூக்கி தலையில வச்சுக்கிட்டு கூட்டத்திலயே இருந்துடலாம்னு எல்லாம் கையில சேரைத் தூக்கியிருக்காங்க! ஏற்கெனவே, அவங்க பொதுச் செயலாளர் தான், “மானை வணக்களம் தோலர்கலே!ன்னு’’ (அவர் அப்படித்தான் சொன்னார்) சொல்லிட்டு, “இந்தச் சேரை தூக்காதே, அந்த மரத்தில ஏறாதே”ன்னு மைக்கி்ல சொல்லிட்டே இருப்பாரு. சரி, மழை நேரத்தில அதையெல்லாம் கேட்க முடியாதே! எல்லாரும் சேரை எடுத்துக் கையில் வைச்சிக்கிட்டாங்க!
அப்போ, ‘மழையை நிறுத்துற வித்தை எனக்குத் தெரியும்’னு தேங்காயோட ஒருத்தர் வந்து நின்னிருக்காரு. எல்லாரும் புரியாம நிக்க… அந்த விஞ்ஞானி தன்னோட வேலையை ஆரம்பிச்சாரு.
தேங்காயையும், வெத்தலையையும் தரையில வச்சு, மியூசிக்கல் சேர் விளையாடுற மாதிரி அதை மூணு சுத்து சுத்திக் கும்பிட்டா, மழை நின்னுடும்னு சொல்லி, அதே மாதிரி செஞ்சவருக்கு… அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல… ரெண்டு செக்கண்டு தான் மனுசன் யோசிச்சான்… படார்னு ‘டீ விக்க… டீ விக்க… டீ விக்க’ன்னு கோஷம் போட எல்லாரும் ஏமாந்ததை மறந்துட்டு, கோஷம் போட… மழை வந்ததில நனைஞ்சு கூட்டத்தையும் முடிச்சுட்டு கிளம்பிட்டாங்க!
ஒலிம்பிக் போட்டிகள் நடக்குற நேரத்துல மழை பெய்யக் கூடாதுன்னு, சில்வர் அயோடைடைப் பயன்படுத்தி, முன் கூட்டியே மழையைப் பெய்ய வைச்சு நிகழ்ச்சியை நடத்துற டெக்னாலிஜய எல்லாம் 2008-லயே சைனாக்காரன் செஞ்சு பார்த்துட்டான். மழை பெய்யாத இடத்தில பெய்ய வைக்கிறோம் அரபு நாட்டுல செஞ்சுக்கிட்டிருக்காங்க…
அவன் புது டெக்னாலஜில டிரோனை விட்டு மழையை நிறுத்த, இந்தியாவை மாதிரி ஒன்றரை பங்கு இடத்துல வர்ற மழையை, பனியைக் கட்டுப்படுத்தன்னு அறிவியலை வச்சு வானத்தையே வளைச்சுக்கிட்டி ருக்கான்!
இவங்க என்னடான்னா… மழைய நிறுத்த தேங்காயையும், வெத்தலையையும் வைச்சு ’பாக்கு வெத்தல மாத்திக்கிட்டிருக்காங்க’… மாங்காய் மடையர்கள் கேள்விப் பட்டிருக்கோம்.. இவங்கள்லாம் என்ன தேங்காய் மடையர்களா?!
இது மட்டுமா நடக்குது இந்தியாவுல… வெள்ளம் நிறைஞ்சு கங்கை நதி ஊருக்குள்ள நுழைஞ்சிடுச்சு… அதுக்கு பால் ஊத்தி கும்பிட்டுக்கிட்டிருக்காரு உ.பி. பிரயாக்ராஜ் (பழைய அலகாபாத்) நகரத்துல போலீஸ் அதிகாரி! என்னடான்னு கேட்டா, “பணிக்குப் புறப்பட்ட போது, தாய் கங்கா என் வீட்டுக்கு வந்திருந்தார். என் வீட்டு வாசலிலேயே அவரை வணங்கி விடைபெற்றேன்”ங்கிறாரு அந்த போலீஸ் சந்திரதீப் நிஷாத்… (இந்து தமிழ் திசை, 4.8.2025)
“கங்கா மாதா, உங்க வீட்டுக்கு வந்தா அப்படியே வச்சுக்க வேண்டியதுதானே! எதுக்கு வடியச் சொல்லி வேண்டுறீங்க?
என்னடா உங்க பித்தலாட்டம்”
– குப்பைக் கோழியார்