புதுடில்லி, ஜுன் 11 – இந்தியாவில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுத் துறை பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சாரங்களுக்கு பிறகு ஆன்லைன் விளையாட்டுகளும் முக்கிய விளையாட்டுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் ஆன்லைன் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்காக ஆன்லைன் விளையாட்டு வீரர்களுக் கான நல சங்கம் 2021இல் உருவாக்கப் பட்டது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் கல்விமுறையின் மூலம் இணையதளம், ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் பயன்பாடு குழந்தைகள் மத்தியில் பரவலான செயல்பாடாக மாறியது. குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டு மற்றும் சமூக வலைத் தளங்களுக்குள் எளிதாக நுழைய இதுவும் வழிவகுத்தது.
ஆன்லைன் விளையாட்டு குறித்து 2022-இல் லுமிகாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி இந்தியாவில் 50.7 கோடிப் பேர் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர் என தெரிய வருகிறது. இந்த அறிக்கை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் பெரு முதலாளிகளின் லாபத்தை பெருக்கு வதற்கு இந்தியா மிகப்பெரும் சந்தையாக உருவாகியுள்ளது என் பதையும் உணரமுடிகிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.1500 கோடி ஆன்லைன் விளையாட்டுகள் தரவிறக்கம் செய் யப்பட்டுள்ளன என ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மிகப் பெரு மளவிற்கு உயர்ந்துள்ளதை காட்டுகிறது. மேலும் ஆன்லைனில் நேரம் செலவழிப்பது மட்டும் இன்றி வீட்டில் இருந்த படியே பணம் சம்பாதிக்க முடியும் என்ற விளம் பரங்களையும் நம்பி பெருமளவு இறங்கி வருகிறார்கள். ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் ‘கேமிங் துறை’யில் கோலோச்சும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் 2022இல் 1.5 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டி உள்ளன. இது 2025இல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்வாண்டு 12% அதிகரித்துள்ளது. 140 கோடி மக்களில் 27.3% பேர் 15 முதல் 29 வயதிற்கு உட்பட்ட இளைஞர் களாக உள்ளனர். இவர்களில் சரிபாதிப் பேர் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கியுள்ளனர். இவர்களில் 43% பேர் பெண்கள் ஆவர். நாளொன்றுக்கு சராசரியாக பெண்கள் 11.2 மணி நேரமும், ஆண்கள் 10.2 மணிநேரமும் ஆன்லைன் விளை யாட்டுகளில் நேரம் செலவு செய்கின்றனர். முதலாளித்துவ வளர்ச்சியில் பெண்கள் எந்தத் துறையிலும் சில உயரங்களை அடைய முடிந்தாலும் அங்கு அவர்கள் பாலியல் ரீதியாக பொருளாதார ரீதியாக சுரண்டப் பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு, ஆன்லைன் விளை யாட்டுக் களமும் விலக்கல்ல. குடும்ப வன்முறையால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க பலர் ஆன்லைனில் நேரம் செல வழிக்கின்றனர். ஆன்லைன் விளை யாட்டுகளில் ஈடுபடும் பெண்களில் பலர் ஆன்லை னிலேயே ஆண்களால் மிரட்டப்படுவதும், பாலியல் வன் முறைக்குள்ளாக்கப்படுவதும் நடக்கிறது. கேமிங்கிலும் கூட ஆண்கள் (சிறுவர்கள் உட்பட) பெண்களை கீழ்மையாகவே நடத்தி வருகிறார்கள்.
சில ஆன்லைன் விளையாட்டு களில் நேரலையில் இணைந்து விளையாடும் போது பெண்களிடம் ஆண்கள் பாலியல் ரீதியாக உரை யாடுவது, வசைபாடுவது, மிக அநாகரீகமாக உடைகளை களைந்து உடலைக் காட்ட வற்புறுத்துவது உள்ளிட்ட பாலியல் வன்முறை களை பெண்கள் சந்திக்கின்றனர். அது மட் டுமின்றி, ஆன்லைன் விளையாட்டில் உலகளாவிய போட்டிகளில் விளை யாடும் பெண்களுக்கு பரிசுப் பணம் வழங்குவது, ஸ்பான்ஷர் ஷிப் உள்ளிட்டவற்றில் பாகுபாடுகள் நிரம்பி வழிகின்றன. ஒரு ஆன்லைன் விளையாட்டுப் போட்டியில் ஒரு பெண் வீரருக்கு 1500 அமெரிக்க டாலர் பணம் பரிசாக கொடுக்கிறார்கள் என்றால் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் போட்டிகளில் இதை விட நூறு மடங்கு பரிசுத் தொகையை வழங்குகின்றனர் என்று இந்திய ஆன்லைன் விளையாட்டு வீரர்களின் கூட்டமைப்பு கூறுகிறது. ஆன்லைன் விளையாட்டு போட்டி களிலும் பெண்கள் மீது இவ்வளவு வன் முறைகள், சுரண்டல்கள் இருந்த போதிலும், 2020இல் 12% ஆக இருந்த பெண்களின் பங்கு பெறும் விகிதம் 2022இல் 22% ஆக அதிகரித்துள்ளது. இந்திய அரசு ஆன்லைன் விளை யாட்டுத் துறையை தரப்படுத்தவும் விளையாட்டில் ஈடுபடுபவர்களை பாதுகாக்கவும் சில விதிமுறைகளை அரசாங்கம் அறிவித்துள்ளதாக கூறப் படுகிறது. இருப்பினும் ஆன்லைன் மற்றும் இணையம் வளர்ச்சியடைந் துள்ள காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது.