சென்னை, ஆக.5 போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), கூகுள் பே (Google Pay) மற்றும் பீம் (BHIM) போன்ற யுபிஅய் செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் இனி தங்கள் பணப் பரிவர்த்தனைகளை பின் எண் இல்லாமல், பயோமெட்ரிக் முறைகளைப் பயன்படுத்தி சரிபார்க்கும் வசதியைப் பெறலாம்.
யுபிஅய் செயலிகளைப் பயன்படுத்த பின் நம்பர் இனி தேவையில்லை. யுபிஅய் பரிவர்த்தனைக்கு புதிய வசதி வந்துள்ளது. போன்பே, பேடிஎம், கூகுள் பே பயனர்கள் இதனால் பயனடைவர். பீம் செயலி பயன்படுத்தும் நபர்களும் இதில் பயன் அடைய உள்ளனர். நிதிப் பரிவர்த்தனைகளை பயோமெட்ரிக் முறையில் சரிபார்க்கலாம். இந்த வசதி இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இது பாதுகாப்பான, எளிய முறையாகும்.
இந்த மாற்றம் டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை எளிதாக்குகிறது. விரல் ரேகை அங்கீகாரம் அல்லது முக அங்கீகாரம் மூலம் இதை எளி மையாக செய்ய முடியும். இது கடவுச்சொல் உள்ளிடும் தேவையை நீக்குகிறது. நிதிப் பரிவர்த்தனைகள் மிகவும் விரைவாக நடக்கும். பய னர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். பயோமெட்ரிக் பாது காப்பு ஒரு சிறந்த வழியாகும்.
யுபிஅய் பயோமெட்ரிக் பாதுகாப்பு
இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு மிகுந்த வசதியைத் தரும். பணப் பரிமாற்ற செயல்முறை மேலும் சுலபமாகும். பின் நம்பரை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. பிரச்சினைகள் குறைந்து, பரிவர்த்தனைகள் விரைவாகும். டிஜிட்டல் பணம் செலுத்துதல் அதிகரிக்கும். இந்த முறை பயனர்களுக்குப் பெரிதும் உதவும்.
ஏற்கெனவே ஆகஸ்ட் 1 முதல், யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) உடனடி கட்டண சேவையில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. UPI பயனர்கள் PhonePe, Google Pay அல்லது Paytm போன்ற கட்டண சேவை வழங்குநர்களை நம்பியிருந்தால், பரிவர்த்தனைகள் நடைபெறும் விதத்தை இந்த விதிகள் பாதிக்கக்கூடும்.
UPI பரிவர்த்தனைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய விதிகளை செயல்படுத்த உள்ளது. ஆகஸ்ட் 1 முதல் UPI-யில் பல மாற்றங்கள் செய்யப்படும் என்று NPCI அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அன்றாட பரிவர்த்தனைகளை பாதிக்காது என்றாலும், UPI தொடர்பான சேவைகளுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர உள்ளது. வங்கி இருப்பை சரி பார்ப்பது, தானியங்கி கட்டணங்கள், வங்கி கணக்கு தகவல்களை பெறுவது மற்றும் கட்டண நிலையை சரிபார்ப்பது போன்ற சேவைகளுக்கு வரம்புகள் விதிக்கப்படும்.
UPI-யின் நிலைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தவே புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக NPCI தெரிவித்துள்ளது.
UPI-யில் வங்கி இருப்பை சரிபார்க்கும் வரம்பு
கடந்த ஆகஸ்ட் 1 முதல், UPI பயனர்கள் ஒவ்வொரு UPI செயலியிலும் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே தங்கள் வங்கி இருப்பை சரிபார்க்க முடி யும். அதிகபட்ச நேரங்களில் Application Programming Interfaces (API) அமைப்பில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க இந்த கட்டுப்பாடு உதவும். NPCI இருப்பு கோரிக்கைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியிருந்தாலும், ஒவ்வொரு வெற்றிகரமான UPI பரி வர்த்தனைக்குப் பிறகும் பயனர்கள் தங்கள் கணக்கில் உள்ள இருப்பைக் காண முடியும். இப்போது ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பேலன்சை சோதனை செய்யலாம். இனி அப்படி செய்ய முடியாது. ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே செய்ய முடியும்.
நிலையான நேரத்தில் தானியங்கி கட்டணங்கள்
நாள்தோறும் UPI பரிவர்த்த னைகளில் சுமையைக் குறைக்க, திட்டமிடப்பட்ட பில் கட்டணங்களை நிலையான நேரத்தில் செயல்படுத்தும் புதிய விதிகளும் இதில் அடங்கும். வணிகர்களுக்கான தானியங்கி கட்டணங்கள் அல்லது OTT, EMI அல்லது பரஸ்பர நிதி முதலீடுகளுக்கான மாதாந்திர திட்டமிடப்பட்ட பரிமாற்றங்கள் காலை 10 மணிக்குள் அல்லது இரவு 9.30 மணிக்கு பிறகும் நடை பெறும். அதாவது இப்போதே ஆட்டோமேட்டிக் பேமெண்ட் வேறு வேறு நேரங்களில் நடக்கிறது. இனி அதை முறையான நேரங்களில் மட்டுமே நடத்த வேண்டும் என்ற திட்டம் அமலுக்கு வருகிறது.
புதிய வழிகள்
அடுத்த மாதம் முதல், UPI பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் பற்றிய தகவல்களை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பெற முடியும். அதாவது இப்போது ஸ்டேட்மென்ட் பெறுவதற்கு கட்டுப்பாடு இல்லை. இனி அதிலும் கட்டுப்பாடு வருகிறது.
நிலுவையில் உள்ள பரி வர்த்தனையின் நிலையை பய னர்கள் மூன்று முறை மட்டுமே சரிபார்க்க அனுமதிக்கப்படுவார்கள். இப்போது இதற்கு கட்டுப்பாடு இல்லை. அதாவது உங்கள் பேமெண்ட் சென்றதா இல்லையா என்பதை 3 முறை மட்டுமே இனி சோதனை செய்ய முடியும். மேலும், ஒவ்வொரு முயற்சிக்கும் இடையே 90 விநாடிகள் இடைவெளி இருக்க வேண்டும்.