நீலமலை, ஆக. 5- 3.8.2025 அன்று குன்னூர் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற நீலமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நாகேந்திரன் முன்னிலை வகித்தார். மருத்துவர் கவுதமன் சிறப்புரையாற்றினார்.
தீர்மானங்கள்
தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
பெரியார் உலகத்திற்கு நிதி வசூல் செய்து தலை மைக்கு அனுப்புவதாக தீர்மானிக் கப்பட்டது.
அக். 4இல் நடைபெறும் ‘குடிஅரசு’ சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டிற்கு பெருந்திரளாக கலந்து கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட செயலாளர் தலைமையில் தந்தை பெரியார் பிறந்த நாள் மலருக்கு விளம்பரம் மற்றும் விடுதலை சந்தா சேர்ப்பதற்கு ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
எதிர்வரும் ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற உள்ள கலந்துரை யாடல் கூட்டத்திற்கு அனை வரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.