‘மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்?’ என்ற தலைப்பில் தலைமைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள துண்டறிக்கைகளை நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பரப்பிட வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கட்டளையை செயல்படுத்தும் வகையில் கழக இளைஞர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அனைவருக்கும் கிராம பகுதிகளில் துண்டறிக்கையை பரப்புரை நிகழ்ச்சி நிரலை தயார் செய்து மாவட்ட தலைவர், செயலாளர்களின் வழிகாட்டுதலோடு உடனடியாக களப்பணியில் இறங்கிடுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
மாவட்டத் தலைவர், செயலாளர்கள் தங்கள் மாவட்டத்திற்கு தேவைப்படும் துண்டறிக்கையினை கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அதற்கான தொகையினை செலுத்தி உடனடியாக பெற்றுக்கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு – அவசரம் அவசியம்
(இவ்வாரத்திற்குள் முழுவதும் துண்டறிக்கை பரப்பிட வேண்டும் என்பது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்பு கட்டளை ஆகும்)
தலைமைக் கழகத்தில் துண்டறிக்கையை பெற்றுக்கொள்ள தொடர்பு கொள்ள
வேண்டிய தொலைபேசி எண்
7639818254, 8300393816, 9578896822
– நாத்திக பொன்முடி
மாநிலச் செயலாளர்,
திராவிடர் கழக இளைஞரணி