கபிஸ்தலம், ஆக.5- கும்பகோணம், கபிஸ் தலம் மணி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி பழைய வளாகத்தில் 26.07.2025 சனி மாலை 06.00 மணிக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கலைஞர் நூற் றாண்டு விழா மற்றும் பெருந்தலைவர் காமராசர் 123வது பிறந்தநாள் விழாவாக சிந்தனைக்களம் – 6 நடைபெற்றது.
குடந்தை கழக மாவட்ட கழக துணைத் தலைவர் வ.அழகுவேல் தலைமை ஏற்றார். பாபநாசம் நகர கழக துணைச் செயலாளர் வி.மதிவாணன் அனைவ ரையும் வரவேற்று பேசினார்.
ஓய்வு பெற்ற தேசிய நல்லாசிரியர் சங்க.கலைச் செல்வன் “காமராசர்123… என்னும் பொருளில் உரையாற்றினார். பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் க.திருஞானசம்பந்தம் அறிமுக உரையாற்றினார்.
நெ.து.சுந்தரவடிவேலு அவர்களும்,காமராசர் அவர்களும் சேர்ந்து எடுத்த செயல்பாடுகள் பற்றி எடுத்துக் கூறினார். தமிழ்நாட்டு தொழில் வளம், அணைகள் கட்டி யது பற்றியும் எடுத்துக் கூறினார்,
பெரியார், காந்தி யடிகள், நபிகள் நாயகம், ஆகியோருடன் காமராசரை ஒப்பிட்டு உரையாற்றினார்.
அவருக்கு ஒன்றிய திரா விடர் கழக பொறுப்பாளர் ஜனார்த்தனன் பய னாடையும், திராவிடர் சமுதாய நல, கல்வி அறக்கட்டளை தலைவர் சா.வரதராசன் நூலினையும் வழங்கி சிறப்பு செய்தார்கள். பாவை பைந்தமிழ் பேரவை பாபநாசம் பொருளாளர் பல்கலைச்செல்வன் பயனாடை அணிவித்தார்.
இரண்டாவது அமர்வு கலைஞர் 100 என்னும் பொருளில் திமுக பேச்சாளர் பாவை பூர்ணிமா உரையாற்றினார். கழக பொதுச்செயலாளர் வி.மோகன் அறிமுக உரை யாற்றினார்.
பெரியார் கல்வி, சமூகப்பணி அறக்கட் டளை உறுப்பினர் சு.கலையமூர்த்தி பயனா டையையும், மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிருவாகி லண்டன் குணா நூலினையும் வழங்கினர்.
நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு
சனாதனம் எப்படி நம்மை பிரிக்கிறது என்பதையும் அதை எப்படி முறியடிப்பது என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார். நீட், புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு என்பனவற்றின் கொடுமைகளை எடுத்துக் கூறினார். முதலமைச்சரின் செயல்பாடுகளை அடுக் கடுக்காகக் கூறி இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசி முடித்தார்.
சிந்தனைக்களம் தொடங்கியதிலிருந்து எல்லா கூட்டங்களுக்கும் வருகை தந்தவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது.கணபதி அக்ரகாரம் கலைச்செல்விக்கு ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.சேகரும், மணி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கபிஸ்தலம் முதல்வர் க.முருகானந்தம், கணபதி அக்ரகாரம் கவிதாவுக்கும், பாபநாசம் மா.துரையரசனுக்கு அண்டகுடி ராசேந்திரனும் பாராட்டி நூல்களை வழங்கினார்கள்.
பாபநாசம் நகர் கழக துணைத் தலைவர் உ. நாகராஜ் நன்றி கூறினர். நிகழ்வுக்கான இணைப்புரையை கோவி.பெரியார் கண்ணன் வழங்கினார்.
கோவி.பெரியார் கண்ணன் தொகுத்த ‘பச்சை தமிழர் காம ராசரின் பகுத்தறிவு சிந்தனைக்களம் என்னும் நான்கு பக்க துண்டறிக்கையும்,ஒன்றிய திராவிடர் கழக செயலாளர் சு.கலியமூர்த்தி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சமஸ்கிருத மொழி நிதி ஒதுக்கீடு பற்றிய அறிக்கையினையும் துண்டறிக்கையாக வழங்கினார். இந்த இரு துண்டறிக்கைகளும் பார் வையாளர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.