குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்

2 Min Read

தூத்துக்குடி, ஜூன் 11– குலசேக ரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கியது. அங்கு முதற்கட்டமாக ரூ.6ரு கோடியில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு ஒப்பந் தம் கோரப்பட்டு உள்ளது.

இந்தியாவின் அனைத்து விண் வெளி திட்டங்களும் ஆந்திர மாநி லம் சிறீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது நாடு விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருவதுடன் வர்த்தக ரீதியாக வெளிநாடுகளை சேர்ந்த செயற்கை கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகின்றது.

இதனால் ராக்கெட் ஏவுதளத் தின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, நமது நாட்டில் கூடுதலாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்தது. பொதுவாக ராக் கெட் ஏவுதளம் அமையும் இட மானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாக வும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாக வும், புயல், மின்னல் மற்றும் மழை யின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாகவும் இருக்க வேண்டும். நிலையான காலநிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருப்பது அவசியம்.

அந்த வகையில் நிலவியல் ரீதி யாக, தூத்துக்குடி மாவட்டம் குல சேகரன்பட்டினம் பகுதியானது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு சிறந்த இடமாக கண்டறியப் பட்டது. இது நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே அமைந்துள்ளது. இதனால் குலசே கரன்பட்டினத்தில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டு களை ஏவ முடியும்.

இதன்மூலம் நமது நாட்டின் அருகில் உள்ள இலங்கையின் வான் எல்லைக்குள் செல்லாமல், ராக்கெட்டுகளை எளிதில் விண் வெளியில் நிலைநிறுத்த முடிவது டன் எரிபொருள் சிக்கனமும் கிடைப்பதால் செலவு குறையும். எனவே, குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் வகையில், அங்குள்ள கடற்கரையை ஒட்டி அரைவட்ட வடிவில் 2 ஆயிரத்து 376 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு கைய கப்படுத்தும் பணி நடந்தது.

இதில் 141 ஏக்கர் புறம்போக்கு நிலமும், மீதம் உள்ள பட்டா நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு இஸ்ரோவிடம் ஒப்படைக்கப் பட்டது. இதனால் இஸ்ரோ தலை வர் சோம்நாத் குலசேகரன்பட்டி னத்தில் ஆய்வு மேற்கொண்டார். உடனடியாக உரிய அனுமதிகளை பெற்று ஏவுதளம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.

அதன்படி, குலசேகரன்பட் டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப் பதற்கான முதல்கட்ட பணிகளை இஸ்ரோ தொடங்கி உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுற்றி சுற்றுச்சுவர் மற்றும் அதனை சார்ந்த பணிகளை மேற்கொள்ள இஸ்ரோ சார்பில் ‘இ-டெண்டர்’ கோரப்பட்டு உள்ளது.

இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.6 கோடியே 24 லட்சம் ஆகும். தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரர்கள் வருகிற 22ஆம் தேதி (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணி வரை விண்ணப் பிக்கலாம். தொடர்ந்து அன்றைய தினம் மதியம் 3 மணிக்கு ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்டு தகுதி யான நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்படும்.

இதுதொடர்பாக பணி ஆணை வழங்கப்பட்ட 15 நாட்களில் இருந்து 11 மாதங்களில் பணிகளை முடிக்க வேண்டும் என, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள் ளது. சுற்றுச்சுவர் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து ராக்கெட் ஏவு தளம் அமைப்பதற்கான கட்டு மானப் பணிகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *