மாட்ரிட், ஆக.4– 10 வயது மகனை தவிக்கவிட்டு சென்ற பெற்றோர் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்
ஸ்பெயினில் ஒரு விமானச் சேவை ஒருங்கிணைப்பாளர் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். மாட்ரிட்டில் இருந்து அயர்லாந்து சென்ற இணையர் தங்களின் மகனின் கடவுச் சீட்டு காலவதியானதை விமான நிலையம் வந்த பிறகே தெரிந்துகொண்டனர். இந்த நிலையில் அந்தசிறுவனை விமான நிலையத்திலேயே விட்டுவிட்டு விமானத்தில் ஏறிவிட்டனர்.
விமான நிலையத்தில் தனியாக ஒரு சிறுவன் அழுதுகொண்டு இருப்பதைக் விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்தனர். இது தொடர்பாக விசாரணை செய்த போது அவர்களின் பெற்றோர் விமானத்தில் ஏறி விட்டது தெரிய்வந்தது. உடனடியாக, பெற்றோர் ஏறிச் சென்ற கிளாஸ்கோ விமானத்தைக் கண்டறிந்து, அது புறப்படுவதற்கு முன்பாகவே அந்த விமானத்தை நிறுத்த உத்தவிட்டனர். பிறகு சிறுவனின் பெற்றோரை அதிலிருந்து இறக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த நாட்டு சட்டப்படி குழந்தை பராமரிப்பில் மெத்தனம் காட்டிய குற்றத்தின் கீழ் கைதுசெய்தனர். சிறுவன் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.
இந்த நிகழ்வு தொடர்பாக மாட்ரிட் விமான நிலைய ஊழியர்கள் கூறும் போது “பெற்றோர்களால் எப்படி தங்கள் பிள்ளைகளை இப்படித் தனியாக விட்டுச் செல்ல முடிகிறது?” என்று தங்களின்அதிருப்தியை வெளிப்படுத்தினார்.மேலும் தங்கள் வாழ்க்கையில் இது போன்று முதல் முதலாக பார்க்கிறோம் என்றும் கூறினர்.