கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாக்க செல்ல நாயை குளிர்சாதனப் பெட்டியில் வைத்த இளம்பெண் காவல் துறையில் புகார்

சியோல், ஆக.4– தென்கொரியாவில், தனது “குக்கி” என்ற செல்ல நாயை கடுமை யான வெப்பத்தில் இருந்து பாதுகாக்க, ஒரு பெண் அதை ஒரு பிட்ஸா உணவகத்தின் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

கொரியாவில் தற்போது கடுமையான கோடைகாலம் நிலவுகிறது. உணவகம் நடத்தும் இளம்பெண் உணவுப் பொருட்களும் வைக்கப்படும்  குளிர்சாதனப் பெட்டியில் தனது செல்ல நாயை வைத்துள்ளார். அந்த காணொலி வெளியாகவே அந்தப் பெண் மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

விலங்கு நல ஆர்வலர்கள் இந்தச் செயலை நாய் துன் புறுத்தல் எனக் கண்டித் துள்ளனர். ஆனால், அந்தப் பெண் தனது செயலுக்கு வேறு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். தனது நாய்க்கு ஏற்கெனவே இதயப் பிரச்சினை இருப்பதாகவும், அதிக வெப்பம் அதற்கு மரணத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதனால்தான், நாயைக் குறுகிய நேரத்திற்கு குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்ததாக அவர் விளக்கமளித்துள்ளார். உணவுப் பொருட்கள் உள்ள குளிர்பதனப் பெட்டிக்குள் வளர்ப்பு நாயை வைத்ததற்காக அவர் மன்னிப்புக் கேட்டார் என ‘தி ஸ்டார்’ (The Star) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *