வட இந்தியா முழுவதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது.
இந்த நிலையில் கான்பூர் கண்டோன் மெண்ட் பகுதியில் மழைநீர் வெள்ளம் கங்கை நீரோடு கலந்து நகரம் முழுவதும் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் கான்பூர் ஜலோர் காவல்நிலைய உயரதிகாரி நாள்தோறும் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தூரம் உள்ள கங்கை ஆற்றிற்குச் சென்று பூஜைகள் செய்துவிட்டு ஒருமணி நேரத்திற்குப் பிறகு பணிக்கு வருவார். ஆனால் மழைவெள்ளம் காரணமாக கங்கை நீர் அவரது காவல்நிலையத்தையும் மூழ்கடித்து விட்டது; இதனால அவர் காவல்நிலைய வாசலிலேயே கங்கைக்குப் பூஜை செய்து பால் ஊற்றினார்.
‘புத்திசாலி அதிகாரி?’ ஒரு மணி நேரம் மிச்சப்படுத்தி விட்டார் எப்படி?