சென்னை, ஆக. 3- சென்னை பெரியார் திடலில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு கூட்டம் (2.8.2025) சிறப்பாக நடைபெற்றது.
ஜாதி ஒழிப்பின் தேவை, கடவுள் மறுப்பு ஏன், பெண்ணுரிமை, சமூகநீதி களத்தில் மாணவர்களின் பிரச்சினைகளான அய்.அய்.டி-யில் குருகுலம் கல்வியை ஊக்குவிக்கும் திட்டம், நீட் தேர்வு, விஸ்வகர்மா யோஜனா, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றை குறித்து கலந்துரையாடினர்.
திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூர பாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க. அன்பழகன் அவர்கள் வருகை தந்த மாணவர்களுக்கு “பெண் ஏன் அடிமையானாள்?” புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தார். மாணவர்களை ஒருங்கிணைத்து வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் ச.சஞ்சய் அனைவருக்கும் நன்றி கூறினார்.