தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலக வேண்டாம் என ஒபிஎஸ்சிடம் பலமுறை தெரிவித்ததாகவும், தன்னிடம் கூறியிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நயினாரிடம் கூறிவிட்டுத் தான் பிரதமரை சந்திக்க ஒபிஎஸ் அனுமதிக்கேட்டு கடிதம் எழுதியதாகவும், பலமுறை இது தொடர்பாக பேச நயினாரை அலைபேசியில் தொடர்புக்கொண்ட போது அவர் எடுக்கவில்லை என ஒபிஎஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.