நியூஒர்லாண்ட், ஆக. 3– அமெரிக்காவைச் சேர்ந்த லிண்ட்சே பியர்ஸ் (35) மற்றும் டிம் பியர்ஸ் (34) இணையர்கள், மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளனர். 30 ஆண்டுகளாகப் பதப்படுத்தப்பட்ட கருவில் இருந்து, ஓர் ஆண் குழந்தையைப் பெற்று அவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இந்தக் கரு 1994-ஆம் ஆண்டில் லிண்டா ஆர்ச்சர்டு (Linda Archerd) மற்றும் அவரது கணவரால் செயற்கைக் கருத்தரிப்பு (IVF) முறையில் உருவாக்கப்பட்டது. அப்போது லிண்டா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மீதமிருந்த மூன்று கருக்களை லிண்டா அதிகப் பணம் செலுத்திப் பதப்படுத்தினார்.
தற்போது, லிண்டா கொடை செய்த அந்தக் கருக்களில் ஒன்றின் மூலம் லிண்ட்சே பியர்ஸ் ஒரு குழந்தையைப் பெற்றுள்ளார். இந்தச் சாதனை எதிர்பாராத ஒரு நிகழ்வாக நிகழ்ந்ததாகப் பியர்ஸ் இணையர் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரசவம் அவர்களை வியப்பில் ஆழ்த்தியதுடன், மருத்துவ உலகில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.