திருச்சி, ஆக.3- திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் 31.07.2025 அன்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற, 19 வயதிற்கு உட்பட்டோருக்கான, மண்டல அளவிலான ஹாக்கி போட்டியில் திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஹாக்கி அணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
சாதனை மாணவர்கள் எஸ்.சஞ்சய்ராம், எம்.ஒய்.முகமது சாஹித்,ஏ.ஜூனோ ரெக்ஸ்டன், ஆர்.அஜய் சுந்தர், எம்.முகம்மது தாரிக், என்.சூர்யபிரகாஷ்,ஏ.முகமது ஷேக் அப்துல்லா, எம்.அமானுல்லா,பி.தரணீஷ், ஜீ.நித்தீஸ்வரரன், பி.ஜெகதீஸ், சதீஷ் பி.ஹரீஸ் ஜெயராம், எஸ்.அபினேஷ், பி.கமலேஷ் கண்ணன் மற்றும் பயிற்றுவித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் எஸ்.சவுமியா மற்றும் என்.கோகுல் ஆகியோருக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த் துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.