ஜெயங்கொண்டம், ஆக.3- “சென்னை சூப்பர் கிங்ஸ்” மற்றும் “அரியலூர் மாவட்ட மட்டைப்பந்து கழகம்” இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான மட்டைப்பந்து போட்டிகள் ஜெயங்கொண்டம் மகிமைபுரம் மாடர்ன் கல்லூரியில் நடைப்பெற்றது.
அதில் பல்வேறு பள்ளி யிலிருந்து அணிகள் பங்கு பெற்றன. இதில் பெரியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
மேலும் பன்னி ரெண்டாம் வகுப்பை சேர்ந்த ராகுல் என்ற மாணவன் சிறந்த மட்டைப் பந்து வீரர் (பேட்ஸ்மேன்) மற்றும் சிறந்த பந்து வீச்சாளர் (பவுலர்) என்ற கோப்பையை பெற்று மேலும் பள்ளிக்கு பெருமை சேர்த்தார். போட்டியில் வென்ற வீரர்களை பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் கே.ராஜேஷ் ஆர்.ரவிசங்கர் மற்றும் ஆர்.ரஞ்சனி ஆகியோரைப் பள்ளி தாளாளர்இ முதல்வர் ஆர். கீதா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.