வல்லம், ஆக.3, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுக்கு முன் படித்த மேனாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மேனாள் மாணவர்கள் சங்கத் தலைவர் பேரா. த.கவிதா அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் தலைமை யுரையாற்றும் போது மேனாள் மாணவர் களாகிய உங்களின் கடந்த காலத்தில் நீங்கள் பயிலும் போது வாழ்க்கை பயணத்தை பற்றிய அனுபவங்களை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும்.
வேந்தர் கி.வீரமணி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை. ஆகையால் இந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டு மேனாள் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக நான் இன்று கலந்து கொண்டேன். மேனாள் விடுதி காப்பாளர் விட்டோபாய் அம்மையார் அவர்களை சந்திக்கலாம் என்று அவர்கள் இருப்பிடத்திற்கு சென்றிருந்தேன். ஆனால் அவர்கள் வேறு பணியின் காரணமாக வெளியூர் சென்றுவிட்டார்கள்.
மாணவர்களுக்கு உறுதுணையாக…
வேந்தர் அவர்கள் அடிக்கடி கூறுவது என்வென்றால் மேனாள் மாணவர்களாகிய நீங்கள் நம்முடைய தூண் என்று கூறுவார்கள். மேனாள் மாணவர்கள் ஒவ்வொருவரும் நல்ல பதவிகளிலும், மற்றும் வெளிநாடுகளில் பதவியில் இருப்பதும் மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 7ஆவது முறையாக மேனாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 2021 கரோனா காலத்தில் மட்டும் நடைபெறவில்லை. இன்று குடும்பத்தோடு இங்கு வந்து கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இன்று அனைவரும் மரம் நடும் விழாவில் கலந்து மரக்கன்றுகளை நட்டுள்ளீர்கள். இம்மரக்கன்றுகள் வளர்ந்து நிழல் கொடுப்பது போல் மற்ற மாண வர்களுக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று கூறினார். மேலும் மேனாள் மாணவர்களுக்கு பயிற்றுவித்த பல பேராசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
சமூகப் பொறுப்புணர்வோடு
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வெ.இராமச்சந்திரன் வாழ்த்துரையாற்றும் போது, 25 ஆண்டுக்கு முன்னால் பயின்ற மாணவர்கள் இன்று ஒன்று சேர்ந்து இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது ஒரு பொற்காலம். மேலும் தொழில்நுட்ப முன்னேற்றம், நிலையான மற்றும் சமூகப் பொறுப்புணர்வோடு இருந்து ஒரு நல்ல நிலையை அடைந்துள்ளீர்கள். மேலும் தாங்கள் பல முன்னேற்றங்களை பெற வாழ்த்துகிறேன் என்றார்.
இங்கு கூடியிருக்கும் மேனாள் மாணவர் களாகிய நீங்கள் பல்கலைக் கழகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும், அறக்கட்டளைகள் நிறுவியும், மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பல் துறைகளில் பணியாற்றும் மேனாள் மாணவர்களாகிய நீங்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் முன்னோடிகளாக விளங்கி கொண்டிருக்கும் நீங்கள் நமது பல்கலைக் கழகத்தில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேற்படிப்பிற்கான உதவிகள்
பல்கலைக்கழக பதிவாளர் பேரா முனைவர் பி.கே.சிறீவித்யா வாழ்த்துரையாற்றும் போது பெரியார் மணியம்மை மகளிர் பொறியற் கல்லூரியாக இருந்து 2007இல் பல்கலைக் கழகமாக உயர்ந்துள்ளது. மேலும் தொடக்க பருவகால திட்டத்தில் மாணவர்கள் சேர்ந்து கேட்ஸ்கோர் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழத்திலோ மற்றும் அய்.அய்.டி.யில் சேருவதற்கு வாய்ப்பு இருந்தது அதில் பயின்ற பல மாணவர்கள் இன்று கலந்துகொண்டுள்ளார்கள். மேலும் தொடக்க பருவகால திட்டத்திற்கு அதற்கு நான் தான் ஒருங்கிணைப்பாளாராக இருந்து அவர்களுக்கு மேற்படிப்பிற்கான உதவிகளை பல்கலைக்கழகம் செய்தது.
பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேரா. முனைவர் ஆர்.மல்லிகா வாழ்த்துரையாற்றும் போது நமது பல்கலைக் கழகத்தில் நல்ல தகுதி பெற்ற பேராசிரியர்களைக் கொண்டு மாணவர் களுக்கு இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு உகந்தது போல் பயிற்று விக்கப்படுகிறது என்றும் கூறி மேனாள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேனாள் மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு ரூ.4,00,000/- நன்கொடையாக வழங்கினர். இறுதியாக மேனாள் மாணவர் சுதா நன்றியுரை ஆற்றினார்.