திராவிடர் கழகம் கண்ட
பெரியாரின் தளபதியாய் செயலாற்றி
தமிழ்நாட்டின் நலன்காத்திட உழைத்தவரே!!
‘விடுதலை’ ஏட்டின் மூலம்
தமிழ்நாடு மக்களின்
உணர்வுகளை எழுச்சியோடு தட்டி எழுப்புகிறவரே!!
பெரியாரின் கொள்கை வழியில்
தமிழ்நாடு மக்களை வழி நடத்துபவரே!!
தமிழ்நாடு மாணவர்களின் கல்வியறிவினை
வளர்த்திட கல்லூரிகளை அமைத்தவரே!!
பெரியாரின் வழியில் பாடுபட்டு
பெண்ணுரிமையை மீட்க
மகளிர்க்கென முதன் முதலில்
தனிக் கல்லூரி கண்டவரே!!
மகளிர் கல்லூரியின் மூலம்
எங்களைச் சிங்கப்பெண்களாய் செதுக்கியவரே!!
புதுமைப் பெண்களாய்
புதுயுகம் கண்டிட புது ஊக்கம் தந்தவரே!!
ஆண்களுக்கு சரி நிகராய் சமுதாயத்தில் எங்களை
தலை நிமிரச் செய்தவரே!!
ஜாதிகள் ஒழிப்புக்கு ஓயாது உழைப்பவரே!!
பதவி சுகம் காண விரும்பாத தன்மானத் தலைவரே!!
எங்கள் பெரியார் மணியம்மை கல்லூரி வேந்தர்
மானமிகு வீரமணி அய்யாவை
உளம் பூரிக்க வணங்குகிறோம்.
– டி.ஏ.சினேகா (ECE)
குறிப்பு: இன்று (2.8.2025) தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக் கழகம்) நடைபெற்ற மேனாள் மாணவிகள் சந்திப்பில்… தோழர் பாடிய கவிதை!