உனக்குப் பெருமை வேண்டுமானாலும்
உற்சாகம் வேண்டுமானாலும், பிற மனிதனுக்கு
தொண்டு செய்வதில் போட்டி போடுவதன் மூலம் தேடிக்கொள்.
குருட்டு நம்பிக்கைகளை அழிவு வேலைகளின்
மூலம்தான் ஒழிக்க முடியும்.
மகத்தான உறுதியும், சிறிதும் சந்தேகமற்ற தெளிவும்,
“பழிப்பிற்கும்” “சாவிற்கும்” கவலையற்ற துணிவும்
உள்ளவனால்தான் அது முடியும்.