திருப்பூர், ஜூன் 12 – திருப்பூர் மாவட்டத்தில் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையா டல் கூட்டம் நேற்று (11.6.2023) நடைபெற்றது.
நிகழ்வில் மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் கிருஷ்ணவேணி அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாவட்ட மகளிரணி தலைவர் யாழ் ஈசுவரி தலைமையேற்றார். இன்றைய சூழலில் சமூக சிக்கலை களைவதற்கு மகளிரின் பங்கு மிக முக்கியம் என்பதையும், அமைப்பாக இணைந்து பணியாற்றுவதின் அவசி யத்தையும் எடுத்து ரைத்து, மகளிரணி – மகளிர் பாச றையின் செயல்பாடுகள் பற்றியும் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை வழங்கினார். திருப்பூர் மாவட்டத் தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மாவட்ட செயலாளர் குமரவேல் ஆகியோர் கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கி முன்னிலையேற்று சிறப்பித்தனர்.வருகை தந்த மகளிர் தோழர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். இறுதி யாக மோகன சுதா அனை வருக்கும் நன்றி கூறினார்.