கடக்கும்
அரபிக் கடலில் நிலவிய ‘பிப்பர் ஜாய்’ அதிதீவிரப் புயலாக வலுப் பெற்று, வரும் 15ஆம் தேதி குஜராத் மாநிலம் மாண்டவி மற்றும் பாகிஸ்தான் கராச்சி கடற்கரைப் பகுதிகளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
சாதனம் வழங்கல்
ஆங்கில மொழி ஆய்வகங்கள் இயங்கி வரும் 6,029 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் களின் பயன்பாட்டுக்கு ஹெட்ஃபோன் சாதனங்கள் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட உள்ளன.
கழிவுநீர்
கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்களை இறக்கினால் 14420 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
திறனாய்வு
அரசுப் பள்ளிகளில் 5ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் நிலை குறித்து அறிவதற்கான திறனாய்வுத் தேர்வு ஜூன் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் நடத்தப்பட உள்ளது.