12.6.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
👉 கருநாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் எனும் சக்தி திட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா பெங்களூருவில் துவக்கி வைத்தார்.
👉 அவசரச் சட்டம் மூலம் டில்லியில் சர்வாதிகாரம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தடுக்கப்படாவிட்டால், விரைவில் பிற மாநிலங்களிலும் அமல்படுத்தப் படும் என டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
👉 அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமெரிக்க ஹிந்து அரசியல் நடவடிக்கை குழு, ஜூன் 14-ஆம் தேதி ஹிந்து அமெரிக்கர்கள் கூட்டத்தை நடத்த உள்ளது.
தி இந்து:
👉 ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங் கத்தால் சட்டம் இயற்ற முடியாவிட்டால், அது நாடாளு மன்ற ஜனநாயகத்தின் சிதைவுக்கு வழிவகுக்கும் என் கிறார் கட்டுரையாளர் வழக்குரைஞர் கவுதம் ராமன்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
👉 தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய சிறப்பு திட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா எதையும் குறிப்பிட்டுக் கூற முடியவில்லை என திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு விமர்சனம்.
👉 மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்கும் உயர்மட்டக் குழுவின் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கண்காணித்து, அரசமைப்புச் சட்டத்தின்படி நியாயமான கொள்கையை தயாரிப்ப தற்கான ஆணையை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என பொதுப் பள்ளி அமைப்புக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு , மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் பேசினார்.
– குடந்தை கருணா