குறிஞ்சிப்பாடி ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மருவாய் சேகர் தந் தையார் அ.கலியபெருமாள் (வயது 84) 9.6.2023 வெள்ளி இரவு விபத்தின் காரணமாக மறைவுற்றார். அன்னாரின் உடலுக்கு கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், செயலாளர் குணசேகரன், அமைப்பாளர் முருகன், மேனாள் ஒன்றிய தலைவர் இந்திரஜித், மேனாள் நகர செயலாளர் முத்தையன், நகராட்சி தலைவர் சிவக்குமார், காப்பாளர் அரங்க பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் தாமோத ரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட செயலாளர் எழில் ஏந்தி, மாநகரத் தலைவர் சிவக்குமார், மாதவன், வழக்குரைஞர் திருமார்பன், மாவட்ட இணை செயலாளர் பஞ்சமூர்த்தி, பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் மாணிக்கவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் உதய சங்கர், செயலாளர் வேலு, அமைப் பாளர் ராமநாதன், ஒன்றிய தலைவர் கனகராஜ், கட்டியங்குப்பம் சேகர், நூலகர் கண்ணன், சிதம்பரம் கழக மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், தீனா, மோகன், கவுன்சிலர்கள் தமிழ் செல்வன் அர்ஜுனன் நந்தகுமார் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் மாலையிட்டு வீரவணக்கம் தெரிவித் தனர். அவரின் இறுதி நிகழ்வு 11.6.2023 ஞாயிறு மாலை 5 மணி அளவில் நடைபெற்றது.