திராவிடர் கழகத்தின் ஆற்றல் மிகு இளைஞரணித் தோழர்களே!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – திராவிடர் கழக மாநில மாநாட்டு அணிவகுப்புக்கான பெரியார் சமூகக் காப்பு அணி பயிற்சிகள் நாடெங்கும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெருமளவில் பங்கேற்று கட்டுக்கோப்பு மிக்க பயிற்சிகளைப் பெற முந்துங்கள்!
நேற்று (31.07.2025) ‘விடுதலை’யில், தமிழ்ப் பண்பாட்டை – வரலாற்றை அபகரித்து, காவிச் சாயம் பூச நினைக்கும் பா.ஜ.க.வின் புரட்டுகளை அம்பலப்படுத்தி வெளிவந்துள்ள “ராஜராஜன் மீது அப்படி என்ன திடீர்க் காதல்? மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்?” என்ற சிறப்பான கட்டுரை துண்டறிக்கையாகத் தயாராகிறது. அதனைத் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் வீடுவீடாக, கடை கடையாக ஆகஸ்ட் 4 முதல் 8 ஆம் தேதி வரை கொண்டு போய்ச் சேருங்கள்! திராவிடப் பண்பாட்டின் மீதான படையெடுப்பைத் தகர்த்திடுங்கள்! இது திராவிடர் கழக இளைஞரணியினருக்கு எம் அன்புக் கட்டளை!
– கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.8.2025