தூத்துக்குடி, ஜூன் 12 – தூத்துக் குடியில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் 11.6.2023 காலை 11.00 மணிக்கு பெரியார் மய்யத்தில் உற்சாகமாக நடைபெற்றது.
திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பா ளர் உரத்தநாடு.இரா. குணசேகரன் தொடக்கவுயாற்றினார்.
தந்தைபெரியார் தமிழர்தலைவர் ஆகியோரின் பேரு ழைப்பை விளக்கி காப்பாளர்கள் மா.பால் ராசேந்திரம்,சு.காசி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
மாநில மாணவர்கழக செயலாளராக பொறுப் பேற்றுள்ள இரா.செந்தூரபாட்டியனுக்கு மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் மா.தெய்வப்பிரியா மாவட்ட அமைப்பாளர் செ.வள்ளி ஆகியோர் பயனாடை போர்த்தி மகிழ்ந்தார்கள். இலட்சக் கணக்கான மாணவர்க ளின் கல்வி, வேலைகளுக்கு எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து 16.6.2023 அன்று சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது. இறுதியில் வழக்குரைஞர் செ.அர்சூன் நன்றி கூறினார்.