எங்களின் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
தாங்கள் உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் இருந்து வருவதை அறிந்து, கவலை அடைகிறோம். விரைவில் நலம் பெற்று வரவேண்டுமென்று விரும்புகிறோம்.
ஏற்ெகனவே திட்டமிட்டிருந்த களக்காடு பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் தங்களிடம் நேரில் வழங்க வேண்டு மென்று நினைத்திருந்த ‘‘பெரியார் உலகம்” நன்கொடை நிதியினை தங்களின் 23-07-2025 ‘விடுதலை’ அறிக்கை யில் கூறியிருந்தபடி, இன்று PSRPI PERIYAR WORLD I.O.B. வங்கி கணக்கிற்கு என்னுடைய S.B.I வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சமும், என்னுடைய வாழ்விணையர் சாந்தி அவர்களின் Bank of India வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் ஒரு லட்சமும் ஆக மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய் ‘பெரியார் உலகம்” நன்கொடை நிதியாக அனுப்பியுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்வதுடன், தாங்கள் சரியாக ஓய்வெடுத்து உடல் நலம் பேணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
சீ.டேவிட் செல்லத்துரை
மேலமெஞ்ஞானபுரம்,தென்காசி