நலம் பெற்றுப் பங்கேற்ற எனது முதல் நிகழ்ச்சி மன மகிழ்ச்சியைத் தந்தது! உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற – ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலப்பள்ளி மாணவ – மாணவியரை வாழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!

1 Min Read

சென்னை, ஆக.1– ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ – மாணவி யர்களுக்கு மடிக்கணினிகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிய பின், முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலை தளங்களில் வெளியிட்ட பதிவில், “மிகவும் பின்தங்கிய – துன்பங்களை அனுபவித்த குடும்பங்களில் இருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் அவர்களது கல்விப் பயணத்தையும் – கல்வி மீதான அவர்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன்!” என உருக்கமுடன் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் அவர்களின் வலை தளப் பதிவு வருமாறு:– நலம்பெற்றுப் பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று, இன்று புகழ்பெற்ற உயர்கல்விநிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ – மாணவியர்களுக்கு மடிக்கணி னிகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி னேன்.

மிகவும் பின்தங்கிய – துன்பங்களை அனுப வித்த குடும்பங்களில் இருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் அவர்களது கல்விப் பயணத்தையும் – கல்வி மீதான அவர்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன்.

கல்விதான் உண்மையான பெருமையைத் தேடித் தரும் என உயர்படிப்புகளுக்குச் சென்றுள்ள இவர்கள் வாழ்வின் அத்தனை உயரங்களையும் காண வேண்டும் என உள்ளன்போடு வாழ்த்து கிறேன்! இப்படி கல்வியால் – உழைப்பால் முன்னேறிச் சாதனை படைப்பவர்களைத்தான் தமிழ்ச்சமூகம் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்!

இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *