கோபி, ஜூன் 12 கோபி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 10..6.2023 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் மாவட்டக் காப்பாளர் இரா.சீனிவாசன் இல்லத்தில் மாவட்டக் கழகத் தலைவர் ந.சிவலிங்கம் தலைமையில், மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டக் காப்பாளர்கள் இரா.சீனிவாசன், பெ.ராஜமாணிக்கம், மாநில இ.அ. துணை செயலாளர் ப.வெற்றி வேல், மாநில மாணவர் கழக துணை செயலாளர் சிவபாரதி, மாவட்ட ப.க. தலைவர் சீனு. தமிழ்செல்வி, மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் குப்புசாமி, ஆசிரியரணி வெள்ளத்துரை, கோபி ஒன்றிய செயலாளர் கருப்புசாமி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மா.சூர்யா, அமைப்பாளர் அ.அஜித்குமார், செயலாளர் எழில் அரசு, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ப.திலகவதி, நம்பியூர் ஒன்றிய செயலாளர் அரங்கசாமி, அந்தி யூர் லோகநாதன், ப.சிவக்குமார், சீனு. மதிவாணன், சி.சுந்தரம், புதிய மாணவர்கள் ச.பிரசாந்த், அ.தனபால், பெரியார் பிஞ்சு பகுத்தறிவு ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக தலைமைக் கழக அழைப்பாளர் ஈரோடு த.சண்முகம் பொதுக்குழுவின் வரவு- செலவு, கழகத் தலை வரின் தொண்டறப் பணி, வைக்கம்போராட்டம், சேரன்மாதேவி குருகுல ஒழிப்புப் போராட்டம், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு இவற்றை முன்வைத்து கிராமந்தோறும் பிரச்சாரம் செய்வது பற்றி உரையாற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. ஈரோட்டில் நடைபெற்ற “கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும் ஏற்று அவற்றைச் செயல்படுத்துவது” என முடிவெடுக்கப்பட்டது.
2. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு, தளபதி ந.அர்ச்சுனன் அவர்களது நூற்றாண்டு, வைக்கம் போராட்டம் நூற்றாண்டு, சேரன்மாதேவி குருகுலக்கல்வி ஒழிப்பு நூற்றாண்டு இவ்விழாக்களை மக்களிடம் பிரச்சாரம் செய்யும் வகையில் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் பிரச்சாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
3. கோபி மாவட்டக் கழகம் சார்பில் ஒருநாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
4. மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கிராமங்களிலும் கழகக் கொடிகளை ஏற்றுவது என முடிவெடுக்கப்பட்டது.
5. நம்பியூரில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் திற்குச் சொந்தமான இடத்தில் பெரியார் படிப்பகம் கட்டடம் கட்டி முடிக்க இக்கூட்டம் தீர்மானிக்கப்பட்டது.
6. பொறுப்பாளர்கள் நியமனம் – ச.பிரசாந்த் சத்தியமங்கலம் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர்; அ.தனபால் நம்பியூர் ஒன்றிய மாணவர் கழகத் தலைவர்.
கோபி மாவட்டக் கழக கலந்துரையாடல்கூட்டம் இளை ஞரணி – மாணவர் கழகத் தோழர்களிடம் உற்சாகத்தை ஏற் படுத்தியுள்ளது.